full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கண்டும் காணாமல் போகும் ராதிகா ஆப்தே!

கபாலி படத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. சமூக வலைதளங்களில் அடிக்கடி இவர் குறித்த சர்ச்சைகள் கிளம்புவது வழக்கம்.

 
சமீபத்தில் இவர் கோவா கடற்கரையில் தனது நண்பருடன் பிகினி உடை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து பதிவிட்டு இருந்தனர்.
 
இதற்கு பதில் அளித்து இருக்கும் ராதிகா ஆப்தே, ‘பீச்சில் பிகினி அணியாமல் புடவையா கட்டிக்கொண்டு செல்ல முடியும்?’ என்னை கிண்டல் செய்கிறார்கள் என்று ஒருவர் சொல்லும் வரை அது எனக்கு தெரியாது. என்னை கேலியும், கிண்டலும் செய்பவர்களை நான் கண்டும் காணாமலும் விட்டுவிடுவேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.