full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வெளிநாட்டு குளிர்பான சர்ச்சை: ராதிகா சரத்குமார் பதில்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த பெரிய போராட்டத்தை தொடர்ந்து, வெளிநாட்டு குளிர்பானங்கள் தமிழகத்தில் விற்பனை செய்யக்கூடாது என்று எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இதன் எதிரொலியாக வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனையும் வெகுவாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், ராதிகா சரத்குமார் கடந்த 2005-ஆம் ஆண்டு நடித்த வெளிநாட்டு குளிர்பான விளம்பரம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த விளம்பரத்தை ராதிகாவை கிண்டல் செய்வதுபோல் எடிட் செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சர்ச்சை குறித்து ராதிகா சரத்குமார் கூறும்போது, உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த விளம்பரம் 2005-ல் எடுக்கப்பட்டது. இதன் இந்தி வடிவத்தில் அமீர்கான் நடித்திருந்தார். இதுகுறித்து இப்போது பேசுவது மனச்சிக்கலைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.