full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விரைவில் பாட்டியாகப் போகும் நடிகை ராதிகா!

நடிகை ராதிகா, கூடிய விரைவில் பாட்டியாக பொறுப்பேற்கப் போகிறார்.

நடிகை ராதிகா கோலிவுட் சினிமாவில் 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், அர்ஜுன் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவருடன் நடிக்காத நடிகர்களே இல்லை என்று கூறலாம். தற்போது இவர் சினிமாவில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார்.

மேலும் ராதிகா, சினிமாவை விட சீரியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் சொந்தமாக ‘வாணி ராணி சீரியலை தயாரித்து அதில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் மகள் ரேயானுக்கும், கிரிக்கெட் வீரர் மிதுனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

ராதிகா

இந்நிலையில் ராதிகாவின் மகள் ரேயானின் வளைகாப்பு சமீபத்தில் நடந்துள்ளது. இதனால், ராதிகா செம்ம சந்தோஷத்தில் உள்ளார்.