full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

காவியனுக்கு வாழ்த்து சொன்ன லாரன்ஸ்

நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ” K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் “கா-வியன்” என்றும் தெலுங்கில் “வாடு ஒஸ்தாடு” என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஷாம் ஜோடியாக ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு – N.S.ராஜேஷ் குமார், இசை – ஷ்யாம் மோகன், பாடல்கள் – மோகன்ராஜ், கலை – T.N கபிலன், நடனம் – விஷ்ணுதேவா, எடிட்டிங் – அருண்தாமஸ், மக்கள் தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – 2M cinemas K.V. சபரீஷ், எழுத்து இயக்கம் – சாரதி

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மோஷன் போஸ்டரை இயக்குனர், நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டார்.

மோஷன் போஸ்டர், டிரைலர் இரண்டையும் பார்த்த அவர் நன்றாக இருப்பதாக சொல்லி படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.