ரயில் – திரைவிமர்சனம்
தமிழ் சினிமாவில் அத்திப்பூ போல ஒரு சில நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகும் அந்த வகையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் வடக்கன் இல்லை பெயர் மாற்றத்தால் ரயில் என்ற தலைப்புடன் வெளியாகிறது, இருந்தும் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமான பெயர் என்றால் மனிதாபிமானம் என்று தான் வைக்கவேண்டும், இருந்தும் நாம் வடக்கன் என்றே பயணிப்போம் அது தான் சரி அது தான் உண்மையும்.
இன்றைய காலத்துக்கு தேவையான ஒரு கதை என்று தான் சொல்லவேண்டும் தமிழ் நாட்டில் இல்லை தென் இந்தியாவில் இன்று வடக்கர்கள் தான் அதிகம் அத்தியாவிச வேலைகளில் இருப்பவர்கள் வடக்கர்கள் தான் காரணம் நம் மக்கள் படித்து பிறநாடுகளில் படிப்புக்கு தகுதியான வேளைகளில் பணி புரிய ஆரம்பித்து விட்டனர் இதனால் அடிப்படை தேவையான வேளைகளில் வடக்கர்கள் இங்கு சம்பளம் அதிகம் வர ஆரம்பித்து விட்டனர். இதை மையமாக வைத்து தான் இந்த வடக்கன் ( ரயில்) படம் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் முற்றிலும் யதார்த்தமான புதிய முகங்கள் தான் நடித்து உள்ளனர்.நாயகனாக – குங்குமராஜ்
நாயகியா க – வைரமாலா பர்வேஸ் மெஹ்ரூ ரமேஷ்வைத்யா செந்தில் கோச்சடை ஷமீரா பிண்ட்டூ வந்தனா
குழந்தை – பேபி தனிஷா சுபாஷ் மற்றும் பலர் நடிப்பில், தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவில் ஜனனி இசையில் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ரயில் (வடக்கன்)
தேனீ அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை தான் இந்த கதை நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்த நாயகன் நாயகி அதே வீட்டு அருகில் வடக்கில் இருந்து அங்கு இருக்கும் பஞ்சு மில்லில் வேலை பார்க்கும் ஒரு வாலிபர் வீட்டின் உரிமையாளர் காத்து கேட்டகாத பாட்டி வசித்து வருகிறார்கள். இதில் நம் நாயகன் எலக்ட்ரீஷியன் வேலை பார்ப்பவர் நாயகி கொஞ்சம் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் மிகவும் நல்லவர் அனைவரையும் மிகவும் நேசிக்கும் ஒருவராக இருப்பவர் இவருக்கு நேர் மறைவான நாயகன் குடித்து விட்டு வேலைக்கு போகாமல் ஊர் சுற்றுபவர். குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துவம்சம் செய்பவர். அந்த சமயத்தில் அந்த வடக்கர் தான் அவருக்கு ஆறுதல் ஒரு சொந்த தம்பி போல ஆறுதல் சொல்லுவார் இது நம்ம ஹீரோக்கு பிடிக்காது நமக்கு பாசம் கொடுக்காமல் எங்கு இருந்தோ வந்தவரிடம் பாசம் காண்பிக்கிறாள் என்று ஹீரோக்கு புதிதாக கடை ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசை அதற்க்கு தன் மனைவிடம் பணம் கேட்டகிறார். ஆனால் அவர் முடியாது என்கிறார்இந்த சமையத்தில் நாயகி சண்டையில் வீட்டை விட்டு வெளியேறுகிறார் . அந்த சமயத்தில் வடக்கர் ஒரு பை கொடுத்து வைக்கிறார்.
வடக்கர் தன் குடும்பத்தை பார்க்க போக தயாராகும் பொது ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். நாயகன் வீட்டு காம்போண்டில் அவரின் சடலத்தை கொண்டு வந்து வைக்கிறார்கள் போலீஸ் ஒண்டும் புரியாமல் தவிக்கும் ஹீரோ அனாதை பிணத்தை கொண்டு வந்து இங்கு போட்டுவிட்டார்கள் என்று பயப்படும் நாயகன் அந்த நேரத்தில் நாயகி விஷயம் அறிந்து வர தேம்பி தேம்பி அழுகிறார். ஐயோ குடும்பத்தை பார்க்க போக இருந்தவன் இன்று அனாதையாக செத்து விட்டான் என்று அழுகிறார் அப்போது நாயகி அப்பா ஏம்மா அனாதை என்று சொல்கிறாய் நாம் இருக்கிறோம் என்று அந்த வடக்கனுக்கு இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்கிறார் இதை கேட்ட அந்த கிராமமே அந்த வடக்கன் இறுதி சடங்கிற்கு உதவி செய்கிறார்கள்.
அந்த நேரத்தில் அந்த வடக்கர் குடும்பத்தின் மனைவி அப்பா அம்மா எல்லோரும் இறுதி சடங்கிற்கு வருகிறார்கள். இறுதி சங்கு நடந்து முடிந்ததும் வடக்கர் வைத்து இருந்த ஐந்து லட்சம் என்ன ஆனது என்று அவர்கள் குடும்பம் கேட்க அப்போது தான் நாயகி வடக்கர் கொடுத்த பை நியாபகம் வர அதை எடுக்க போகிறார். ஆனால் அந்த பை வைத்த இடத்தில இல்லை இதனால் கோபம் அடைந்த நாயகி நிச்சயம் நம் கணவன் தான் எடுத்து இருப்பான் என்று அவரிடம் கேட்கிறார்.நான் எடுக்கவில்லை என்று சொல்ல இனி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். இதில் இந்த பணம் என்ன ஆனது கிடைத்ததா நாயகன் திருந்தினரா என்பது தான் மீதி கதை.
படத்தில் நடித்த அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். இத்தியாரும் புதுமுகம் என்று சொல்லும் படியாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடித்து உள்ளனர். குறிப்பாக நாயகன் நாயகியாக நடித்த இருவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்து உள்ளனர். அவர்கள் மட்டும் இல்லை ஒவ்வொரு பாத்திரமும் கதைக்கு உயிர் கொடுத்து உள்ளனர். இப்படி பட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்த இயக்குனருக்கு பாராட்டுகள் .
இயக்குனர் சரவணா சக்தி மிகவும் ஒரு நேர்த்தியான திரைக்கதை மூலம் நம்மை ரசிக்க வைத்து உள்ளார் அதே நேரத்தில் நம்மை சிந்திக்கவும் வைத்துள்ளார்.கதை ஓட்டத்தை விட்டு எங்கும் சிதறாமல் ஒரு அற்புதமான திரைக்கதை மூலம் நம்மை நெகிழ வைக்கிறார் குறிப்பாக இறுதி காட்சி அந்த அரைமணி நேரம் நம்மை ஒரு புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கிறார். ஊரை விட்டு ஊர் பிழைக்க வந்து விட்டான் என்று ஏளனம் பேசுபவர்களுக்கு ஒரு சாட்டை அடி கொடுத்து இருக்கிறார்.
மொத்தத்தில் ரயில் ( வடக்கன்) நமக்கு ஒரு பாடம்.