full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இளம் இயக்குனருடன் கைகோர்க்கும் ரஜினி

தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ரஜினி நாயகனாக நடிக்கவுள்ளார்

Rajinikanth Lauds Desingh Periyasamy After Watching Kannum Kannum  Kollaiyadithaal! - Filmibeat

சிவா இயக்கத்தில் உருவாகும் ‘அண்ணாத்த’ திரைபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வருகிறரர்.இந்தப் படத்துக்குப் பிறகு ரஜினி நடிப்பில் உருவாகும் 169-வது படத்தை யார் இயக்கவுள்ளார் என்பது பெரும் கேள்வியாக இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என்று செய்திகள் பரவின. தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் 169-வது படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

rajini-next-movie-confirmed-with-designh-periyasamy

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கியவர் தேசிங் பெரியசாமி.ரஜினியின் தீவிர ரசிகரான தேசிங் பெரியசாமி காலா திரைபடத்தின் போது ரஜினியை சந்தித்து தனது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்திற்கு வாழ்த்து பெற்று கொண்டார்.
அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தேசிங் பெரியசாமியை அழைத்துப் பாராட்டினார் ரஜினி.

ரஜினி – தேசிங் பெரியசாமி இணையும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் ஏஜிஎஸ் தயாரிக்கும் முதல் ரஜினி படமாக இது அமையவுள்ளது.

‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாரானவுடன், ரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது