‘இறைவி’ படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘மெர்குரி’. இதில் பிரபுதேவா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்தமே இல்லாமல் உருவான இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தை அடுத்து ரஜினி படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்குப் பிறகு தனுஷை வைத்து இயக்குகிறார்.
இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் நடிக்க இருக்கிறாராம். இதற்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறதாம்.
ஆக்சன் கேங்ஸ்டர் படமாக உருவாகவிருக்கும் இதன் படப்பிடிப்பை லண்டனில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது