ரஜினியின் மாஸ் காம்போ! உண்மையா?

News

2.0 மற்றும் காலா என ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. இவ்விரு படங்களுக்காக அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே காத்துக் கிடக்கிறது.

இதற்கிடையில் அரசியல் கட்சி தொடங்குவதாகவும் அறிவித்து, அதற்கான பணிகளிலும் வேகமாக செயல்பட்டு வருகிறார் ரஜினி. கட்சி அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனக் காத்திருந்தவர்களுக்கு, மீண்டும் ஒரு படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்ற செய்தி வந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

“பீட்சா”, “ஜிகர்தண்டா” படங்களை இயக்கிய இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதில் விசேஷம் என்னவென்றால் கார்த்திக் சுப்புராஜ் – ரஜினி புதிய கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கக் கூடும் என தகவல்கள் உலாவரத் தொடங்கியிருக்கின்றன இப்போதே.

இதற்கு முன்னர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘இறைவி’ படங்களில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் “ஜிகர்தண்டா” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் கூட நடித்திருந்தார்.

எனவே, ரஜினி படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளும் இருப்பதாகவே கருதப்படுகிறது.