full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பிரபல நடிகர் மறைவுக்கு ரஜினி, மோடி இரங்கல்

பாலிவுட்டின் பிரபல நடிகரான வினோத் கண்ணா (70) மும்பையில் இன்று காலை காலமானார். கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், 2 நாட்களுக்கு முன்னர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மும்பையில் காலமானார்.

இவருக்கு கவிதா கண்ணா என்ற மனைவியும், ராகுல், அக்‌ஷயே, சக்‌ஷி என்ற மகன்களும், ஷ்ரத்தா கண்ணா என்ற மகளும் இருக்கின்றனர். பஞ்சாப்புக்கான பாராளுமன்ற உறுப்பினரான வினோத் கண்ணா பாலிவுட்டில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், வினோத் கண்ணா மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில் மை டியர் வினோத் கண்ணா…. உங்களை மிஸ் பண்ணுகிறேன். உங்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்த ரஜினி, அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடியும் வினோத் கண்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஒரு பிரபல நடிகராக எப்போதும் நினைவில் இருப்பவர். ஒரு சிறந்த தலைவர். நல்ல மனிதர். அவரது மறைவு வேதனையை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.