full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வருவாரா? மாட்டாரா? 31 ஆம் தேதி முடிவு!

1996 லிருந்து தமிழகத்தில் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரே விசயம் எது எனில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தான். 21 வருடங்கள் பலத்த யோசனைக்கு பிறகு ஒரு வழியாக அரசியலுக்கு வருவது குறித்த பூடகமான தகவலை ரஜினி தெரிவித்திருக்கிறார்.

கடந்த மே மாதம் தனது ரசிகர்களை மாவட்ட்ட வாரியாக சந்தித்த ரஜினிகாந்த், இரண்டாம் கட்டமாக இன்று முதல் மீண்டும் ரசிகர்களை சந்திது வருகிறார். அப்போது பேசிய அவர்,

“போர் என்றால் தேர்தல் தான். போருக்கு போனால் வெற்றிபெற வேண்டும். அதற்கு வீரத்தை விட வியூகம் தான் முக்கியம்” என்று பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசும்போது “ அரசியலுக்கு நான் புதியவனில்லை. 31 ஆம் தேதி எனது முடிவை கண்டிப்பாக அறிவிப்பேன்” என்றும் கூறியுள்ளார்.

வருவாரா? மாட்டாரா? எல்லாம் 31 ஆம் தேதி தெரிந்துவிடும்.