full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ரஜினி கட்சியில் இணைந்த முதல் பிரபலம்!

லைகா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் பிரிவு அதிகாரி ராஜு மகாலிங்கம். இவர், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’ படத்தின் தயாரிப்பு பணிகளை கவனித்து வருகிறார்.
தற்போது அவர் ‘2.0’ படத்தோடு தனது பணியை ராஜினாமா செய்திருக்கிறார்.

இது குறித்து ராஜு மகாலிங்கம் கூறியிருப்பதாவது,

“2.0 படப்பிடிப்பின்போது ரஜினியை நான் நெருக்கமாக கவனித்தேன். அவரது கடமை உணர்வு, நேர்மை, அர்ப்பணிப்பு என்னை ஈர்த்துள்ளது. எனவே திரு.ரஜினிகாந்த் அவர்களின்
அரசியல் பயணத்தில் என்னையும் இணைத்துக் கொள்வதற்காக எனது பணியை ராஜினாமா செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் கொள்கை, கட்சியின் பெயர், கொடி என எந்த அறிவிப்பும் வராத நிலையில் முதல் நபராக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு
ஆச்சர்யமூட்டியிருக்கிறார் ராஜு மகாலிங்கம். இவர் கவனித்துக் கொண்டிருந்த பணியை கருணாமூர்த்தி தொடர்வார் என லைகா தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.