full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ரசிகனுக்காக ஆடியோ வெளியிட்ட ரஜினி

மதுரையைச் சேர்ந்தவர் ரஜினி ரசிகர் முரளி. உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினிகாந்த் மன்றத்தை முதலில் தொடங்கியதும் இவர்தான் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங் களில் பரவி வருகிறது. இதையடுத்து இன்று ரஜினிகாந்த் ரசிகருக்காக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: முரளி நான் ரஜினிகாந்த் பேசுறேன். உங்களுக்கு ஒன்றும் ஆகாது கன்னா. இறைவனை பிரார்த்திக் கிறேன். நீங்கள் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிடுங்க. வீட்டுக்கு வந்த பிறகு குடும்பத்தோடு எனது வீட்டுக்கு வாங்க. தைரியமாக இருங்க. வாழ்த்துக்கள். இவ்வாறு ரஜினிகாந்த் ஆடியோவில் பேசியுள்ளார்.

முன்னதாக முரளி உருக்கமான டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தலைவா எனது இறுதியான ஆசை 2021-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மிக குருவாகவும் வீரநடைப் போட்டு அடிதட்டு கிராம மக்களின் தனி நபர் வருமானம் ரூ.25 ஆயிரம் என்ற நிலையை உருவாக்கிகொடு.

உன்னை அரியணையில் ஏற்ற பாடுபட முடியவில்லை என்ற ஒரே வருத்தம் என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முரளி குணம் அடைந்து வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், சிறுநீரக பிரச் சினை, கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.