full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மும்பை விரைகிறார் ரஜினி!

நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடைபெற்ற திருமணா நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இந்த திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எப்படியும் இன்று மாலைக்குள் நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்ம்பைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி பல பிரபலங்களும் மும்பை விரைந்து கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக நடிகர் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மும்பை செல்கிறார்.