full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நயன்தாராவின் பார்வையில் ரஜினியும், அஜித்தும்

தமிழ்த் திரை உலகத்துக்கு வந்த உடனேயே ரஜினி, அஜித்துடன் ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. இரண்டு நாயகர்கள் மீதும் தான் வைத்திருக்கும் மரியாதையை ஒரு டி.வி. நிகழ்ச்சியில் நயன்தாரா தெரிவித்தார். அப்போது கூறிய அவர்….

‘‘எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித். அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் நன்றாக இருக்கும். அவர் எப்போதும் ரியலாக நடந்து கொள்வார். ‘பில்லா’ படத்தில் நடித்த போது நான் பெரிய நடிகை அல்ல. சாதாரண நடிகை என்றாலும், அஜித் என்ற பெரிய ஸ்டாருடன் நடிக்கிறோம் என்ற எண்ணம் எனக்கு வராமல் பார்த்துக் கொண்டார். என்னை சமமாக நடத்தினார்.

ரஜினி, அஜித் இருவருமே மிகவும் பணிவானவர்கள். மற்றவர்களை மதித்து நடப்பவர்கள். பெண்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். ரஜினி, அஜித் ஆகியோரிடம் பெண்கள் யாராவது பேசவந்தால் உட்கார்ந்து கொண்டு பேச மாட்டார்கள். எழுந்து நின்று பேசுவார்கள். ஆண்களிடம் இந்த குணத்தை பார்ப்பது அரிது. இந்த வி‌ஷயத்தில் அவர்களை மிஞ்ச யாரும் இல்லை. இதனால்தான் ரஜினி, அஜித் இருவரும் பெரிய ஸ்டார்களாக திகழ்கிறார்கள்’’ என்றார்.