full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கலைஞரின் நலம் விசாரித்த ரஜினி.. விஜய்!!

தி.மு.க. தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர்.மு.கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிற்குப் பிறகு தற்போது அவரது உடல்நிலை சீராகி வருகிறது.

கலைஞருக்கு உடல்நலம் பாதிக்கப் பட்ட நாளில் இருந்தே திரளான தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் திரண்டனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்புகள், திரைப்பட துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கேட்டறிந்து செல்கின்றனர்.

நேற்று மாலை தமிழகம் திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்.

இந்நிலையில் இன்று, நடிகர் விஜய் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார். அப்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.