மாவட்ட செயலாளர் மரணம்; ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 50 லட்சம் – ரஜினி வழங்கினார்!

News

கடந்த சில தினங்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்த தர்மபுரி மாவட்ட செயலாளர் குடும்பத்துக்கு ரூ 50 லட்சம் பண உதவியும், அடமானத்தில் இருந்த வீட்டையும் மீட்டுக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக இருந்தவர் மகேந்திரன். கடந்த மாதம் சாலை விபத்தில் இவர் பலியானார். இந்நிலையில் நேற்று அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் சந்தித்தனர்.

அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறிய ரஜினி, மக்கள் மன்றம் சார்பில் ரூ.40 லட்சம் ரூபாயை வழங்கினார். பிறகு தனது சார்பில் ரூ.10 லட்சமும் நிதியுதவி அளித்தார். மேலும் அடமானத்தில் இருந்த வீட்டை மீட்க 8 லட்சம் ரூபாய் பணத்தை வழங்கிய ரஜினி, மகேந்திரனின் மகன்களின் படிப்பு செலவையும் ஏற்பதாக தெரிவித்தார்.

Facebook Comments