full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

ரஜினிக்கு அழைப்பு விடுத்த பிஆர்ஓ யூனியன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் சார்பில் முப்பெரும் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “எங்கள் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆா். அவா்களின் நூற்றாண்டு விழாவும், 1958ல் மக்கள் தொடா்பாளா் என்ற தொழில் துவங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டியும், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் 1993ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 25 ஆண்டு வெள்ளி விழாவையும் சோ்த்து முப்பெரும் விழாவாக கொண்டாட உள்ளோம். விழாவில் எம்.ஜி.ஆா். அவா்களின் படங்களில் பணியாற்றிய நடிகா், நடிகையா் தொழில் நுட்ப கலைஞா்களுக்கு விருது வழங்கி கெளரவபடுத்த உள்ளோம்.” என்று தெரிவிக்கப்பட்டது.

வரும் ஜனவரி மாதம் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணா் அரங்கத்தில் இந்த முப்பெரும் விழா தொடர்பாக, தமிழக கவா்னா், தமிழக முதல்வா், தமிழக துணை முதல்வா், தமிழக செய்தித்துறை அமைச்சா், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவா் ஆகியோருக்கும் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வா்த்தக சபை, கில்டு, டிஜி்ட்டல் தயாரிப்பாளா்கள் சங்கம், தென்னிந்திய நடிகா் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளா் சம்மேளனம், திரைப்பட இயக்குனா்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளா்கள் சங்கம், விநியோகஸ்தா்கள் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கும் கடிதம் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது, பி.ஆர்.ஓ யூனியன் தலைவர் தலைவர் டைமண்ட் பாபு தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.