தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த்தை டுவிட்டரில் சுமார் 45 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில், ரஜினி தற்போது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் இணைந்திருக்கிறார்.
ரஜினிகாந்த் பெயரில் இன்று தொடங்கப்பட்ட பக்கத்தை இதுவரை ஒரேநாளில் இதுவரை 1 லட்சத்து 37 ஆயிரம் பேர் பின்பற்றியிருக்கின்றனர்.
இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இதுவரை 30 ஆயிரம் பேர் ரஜினியை பின்தொடர்கின்றனர்.
கடந்த ஆண்டு இறுதியில் அவரது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார்.
பின்னர் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றினார். தற்போது ரஜினி கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. ரஜினியும் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய ரஜினியின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் ரஜினி முடிவு செய்திருக்கிறார். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ரஜினிகாந்த் தற்போது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இணைந்திருக்கிறார்.
ரஜினியின் பேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/Rajinikanth/
இன்ஸ்ட்ராகிராம் பக்கம்: https://www.instagram.com/rajinikanth/