full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ரஜினியின் அதிரடி அறிவிப்பு!

ரஜினி அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என தமிழகமே காத்திருக்க, வந்திருப்பதோ ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு தானா. “2.0”, “காலா” திரைப்படங்களோடு அவரது திரைப்பயணத்தை விட்டு, அரசியல்வாதியாக முழு வேகத்தில் செயல்படுவார் என எதிர் பார்த்திருந்தவர்கள் எல்லாம் இந்த செய்தியைக் கேட்டு வியப்படைந்திருக்கிறார்கள்.

அதுவும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார் என யாருமே நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். இப்படி எல்லோருக்குமே வியப்புக்கு மேல் வியப்பு தந்திருக்கும் இப்படத்தை “சன் பிக்சர்ஸ்” சார்பாக கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

படம் குறித்த அதிகாரப் பூர்வமாக இந்த தகவல்கள் மட்டுமே வெளிவந்திருக்கும் சூழலில், படத்தில் நடிக்கவிருக்கும் ஏனைய நடிகர், நடிகையர் குறித்தோ.. தொழிற்நுட்பக் கலைஞர்கள் குறித்தோ எதுவும் தெரிவிக்கப் படவில்லை. விரைவில் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.