full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

புத்துணர்ச்சியுடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி ஆன்மீக பயணமாக இமயமலை உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்ட ரஜினி இன்று காலை சென்னை வந்தடைந்தார். இதையடுத்து போயஸ் தோட்டம் வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, ஆன்மிக பயணம் சென்று வந்தது மனதிற்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும், 16 மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தான் ஈடுபட இருப்பதாகவும் கூறினார். மேலும், “புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது. ரத யாத்திரை என்பது மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் போலீசார் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு தடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.