காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளாஇ நட்த்தக் கூடாது என்று தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் வலியுறுத்தின. அதையும் மீறி நடத்தினால் சேப்பாக்கத்தின் போராட்டம் நடத்துவதாகவும் அறிவுறுத்தி இருந்தார்கள். ஆனால், திட்டமிட்டபடி போட்டியை நடத்துவது என்று ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்து, அரசிடம் பாதுகாப்பு கோரியது. அதன்படி அரசும், 4000 காவலர்களை பாதுகாப்பிர்காக சேப்பாக்கம் அனுப்பி வைத்தது.
இதனால் அறிவித்தபடி போராட்டத்தை நடத்துவது என்று, நேற்று மாலை இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், தங்கர் பச்சான், கௌதமன், களஞ்சியம், எம்எல்ஏ-க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு, கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் தலைமையில் மாபெரும் போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது அந்த போராட்டத்தில் “நாம் தமிழர்” தொண்டர்களுடன் அதன் ஒருங்கிணைப்பாளார் சீமானும் கலந்து கொண்டார்.
போராட்டம் நடந்து கொண்டிருந்த போது திடீரென காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காவல்துறை போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் போலீசார் மீது மூர்க்கத்தனமாக தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்விற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அதில்,
“வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.