நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை, கடந்த மே 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை, கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்நிகழ்ச்சியின் போது நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பற்றிய தனது கருத்துக்களை வெளியிட்டார்.
ரஜினியின் கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் அரசியலுக்கு வருவதற்கு எதிரான கருத்துக்களும் கூறப்பட்டன. ரஜினிக்கு எதிராக போராட்டமும் நடந்தது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ரஜினி ரசிகர்களும் போராட்டத்தில் குதித்தனர். ரஜினியை எதிர்ப்பவர்களின் கொடும்பாவியை எரித்தனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் ரசிகர் மன்ற அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுவார்கள். மன்றத்திலிருந்து நீக்க தலைமை மன்ற நிர்வாகி சுதாகருக்கு அதிகாரம் அளிக்கிறேன்.” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.