தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். கார்த்தியுடன் இவர் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் வெற்றி பெற்றதால், தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது முன்னணி கதாநாயகர்களான சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் யாருமே எதிர்பாராத நிலையில் தெலுங்கில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
பொயபட்டி சீனு இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். கதாநாயகியாக பிசியாக இருந்தாலும் ராம்சரணின் நட்புக்கு இதை ஒப்புக்கொண்டுள்ளார்.