full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) நடிகர் சூர்யா வெளியிட்டார்.எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பிரத்யேக காட்சி, செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி, 240 நாடுகளிலும் அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.அமேசான் பிரைம்- சமீபத்திய திரைப்படங்கள், பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்டப் காமெடி, அமேசான் ஒரிஜினல்ஸ், விளம்பரம் இல்லாமல் இசையை கேட்பதற்கான அமேசான் பிரைம் மியூசிக்.. இவையெல்லாம் இலவசமாகவும், விரைவாகவும் வழங்குவதற்கான வினியோக கட்டமைப்பு, புதிய பார்வையாளர்களை சென்றடைவதில் எளிதான அணுகுமுறை ஆகியவற்றை நம்ப முடியாத வகையில் அமேசான் வழங்கிவருகிறது.சிறந்த ஒப்பந்தங்கள், புதிய தொடக்கங்கள், வரம்பற்ற வாசிப்பை கொண்ட பிரைம் ரீடிங், இலவச விளையாட்டு உள்ளடக்கம் இவற்றுடன் கேமிங் வித் பிரைம் மூலம் ஏராளமான பலன்கள்.. இவை அனைத்தும் ரூ 999 /- ரூபாய் செலுத்தி ஆண்டு உறுப்பினராக பதிவு செய்து கொள்பவர்களுக்கு அமேசான் வழங்கி வருகிறது. நீங்களும் இந்த சந்தா செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளராகி அமேசான் உள்ளடக்கத்தின் நீண்ட பட்டியலை பார்வையிடலாம். அமேசான் பிரைம் மொபைல் பதிப்பு, மொபைல் பதிப்பின் ஒற்றைத் தொடர்பை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான வசதி… இவையனைத்தும் ஏர்டெல் ஃப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்து வருகிறது என்பது கூடுதலான நல்ல விஷயம்.

அமேசான் பிரைம் வீடியோ, 2டி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் முன்னோட்டத்தை, நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று வெளியாகிறது. இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான சமூக நையாண்டி திரைப்படமான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ ஒரு கிராமீய வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் திரைப்படம். மனிதநேய உணர்வுகளை நகைச்சுவை கலந்து உருவாக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகை ரம்யா பாண்டியன், நடிகை வாணி போஜன், நடிகர் மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகேசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நடிகர் சூர்யா இப்படத்தை தயாரித்திருக்கிறார், ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்‘ படத்தின் முன்னோட்டத்தில், ஒட்டுமொத்த இந்தியாவும் அதன் இதய பகுதியாக திகழும் கிராமம் ஒன்றை உற்று நோக்குகிறது. அங்கு 35 வயதான குன்னிமுத்து என்ற விவசாயி, தன் மனைவி வீராயி என்பவருடன், காணாமல் போன தன்னுடைய பெற்றெடுத்த பிள்ளைகளைப் போல் வளர்த்த கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற இரண்டு காளைகளை தேடுகிறார்கள். இதற்கான தேடலில் அவர்கள் ஈடுபட்டிருக்கும்போது உள்ளூர் காவல் துறையினரும், அரசியல்வாதிகளும் தங்களுக்கான நடவடிக்கைகளில் இதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதன் போது ஏற்படும் சுவாரசியமான மற்றும் எதிர்பாராத திருப்பங்களை நகைச்சுவை ததும்ப சொல்லும் வகையில் கதை பயணிக்கிறது.இதுதொடர்பாக அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் உள்ளடக்க தேர்வுக்குழு தலைவர் விஜய் சுப்பிரமணியம் பேசுகையில்,’ ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படம் இதய பூர்வமான மனிதர்களின் உணர்வுகளை சொல்லும் கதை. சூழலுக்கேற்ற நகைச்சுவையுடன் கூடிய இப்படத்தின் திரைக்கதை, பார்வையாளர்களின் உணர்வுகளுடன் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி முதல் வெளியீடாக ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ வெளியாகிறது. அமேசான் பிரைம் வீடியோ, எப்பொழுதும் வித்தியாசமான கதை சொல்லும் படைப்புகளை ரசனையுடன் தேடி, பார்வையாளர்களுக்கு வழங்குகிறது’. என்றார்.

படத்தைப் பற்றி இயக்குனர் அரிசில் மூர்த்தி பேசுகையில்,‘ இந்த திரைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமானது. இதயப்பூர்வமான கதையை உயிர்ப்புடன் திரையில் கொண்டுவர படத்தில் பணியாற்றிய நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சோர்வின்றி உழைத்தனர். படத்தில் கதையின் நாயகனான குன்னிமுத்துவின் தேடலில் அனைவருக்கும் பொதுவான உணர்வு பதுங்கி இருப்பதாகவே கருதுகிறேன். இந்த திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாவதால் சர்வதேச பார்வையாளர்களை சென்றடையும். இதனால் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும் இப்படத்தை உருவாக்கும்போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சியைப் போலவே, அவர்களும் இப்படத்தைக் காணும்போது சந்தோசமடைவார்கள் என நம்புகிறேன்.’ என்றார்.தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா பேசுகையில்,’ ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் முன்னோட்டத்தை பார்வையாளர்களுக்காக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எளிய மனிதர்களின் வாழ்க்கையில் இடம்பெறும் நகைச்சுவையுடன் கூடிய மனித நேய உணர்வு சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக நாங்கள் அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.அமேசான் பிரைம் வீடியோ பட்டியலில் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களின் வரிசையில் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’படமும் இணைந்திருக்கிறது. இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர்களான ‘த ஃபேமிலி மேன்’, ‘மிர்சாபூர் சீசன் 1&2‘, ‘காமிக்ஸ்தான் செம்ம காமெடிப்பா’, ‘பிரீத் இன்டூ த ஷாடோஸ்’, ‘பந்திஷ் பண்டிட்ஸ்’, ‘பாதல் லோக்’,‘ த ஃபார்காட்டன் ஆர்மி’, ‘ஆஸாதி கே லியே’, ‘சன்ஸ் ஆஃப் த சாயில்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்’, ‘ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்’,‘ த பேமிலி மேன் – நியூ சீசன்’, ‘மேட் இன் ஹெவன்’, ‘இன்சைட் எட்ஜ் சீசன் 1 மற்றும் சீசன் 2’ ஆகியவைகளும் இடம்பெற்றிருக்கிறது.

இவற்றுடன் இந்திய திரைப்படங்களான ‘ஷெர்னி’,‘ கூலி நம்பர் ஒன்’,‘ ஹலோ சார்லி’, ‘குலாபோசிதாபோ’, ‘துர்காமதி’, ‘சலாங்’, ‘சகுந்தலா தேவி’, ‘தூஃபான்’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘பிரெஞ்ச் பிரியாணி ’,‘லா’, ‘சூபியும் சுஜாதாயும்’, ‘பெண்குயின்’, ‘நிசப்தம்’, ‘மாறா’, ‘வி’, ‘சீ யூ ஸுன்’ ‘சூரரை போற்று’,‘ பீமாசேனா நள மகாராஜா’, ‘திருஷ்யம் 2’, ‘ஹலால் லவ் ஸ்டோரி’, ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்’, ‘புத்தம் புது காலை’ போன்ற திரைப்படங்களும் உள்ளன. மேலும் விருதுகளை வென்ற மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சர்வதேச அளவில் அமேசானின் ஒரிஜினல் தயாரிப்புகளான ‘ த டுமாரோ வார்’, ‘போரத் சப்ஸ்க்யூவன்ட் மூவி ஃபிலிம்’, ‘கமிங் 2 அமெரிக்கா’ ‘வித்தவுட் ரிமோர்ஸ்’, ‘ டாம் கிளான்ஸியின் ஜாக் ரியான்’, ‘த பாய்ஸ்’, ‘ஹன்டர்ஸ்’, ‘ஃப்ளீபேக்’ மற்றும் ‘த மார்வலஸ் மிஸஸ் மைசெல்’ஆகிய இவை அனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தாமலேயே கிடைக்கும். இந்த சேவையை ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் காண இயலும்.‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் முன்னோட்டத்தையும், படத்தையும் அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர்கள் எங்கேயும் எப்போது வேண்டுமானாலும் கண்டு ரசிக்கலாம். ஸ்மார்ட் டிவி, மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லட், ஆப்பிள் டிவி மற்றும் பிரைம் வீடியோ செயலியிலும், செயலியை பதிவிறக்கம் செய்தும் காணலாம். அமேசான் பிரைம் வீடியோ இந்தியாவில் எந்தவித கூடுதல் கட்டணத்தையும் செலுத்தாமல் பிரைம் உறுப்பினர்கள் ஆண்டுக்கு 999 ரூபாய் சந்தா செலுத்தி உறுப்பினராகியும் காணலாம். இது தொடர்பாக புதிய வாடிக்கையாளர்கள் கூடுதல் தகவல்களை பெற விரும்பினால்  என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.