ராமாயணம் லெஜண்ட் ட்ராமா – திரைவிமர்சனம்

க்ரியேடிவ் இயக்குனராக விஜயேந்திர பிரசாத் பணிபுரிய தயாரிப்பாளர்களாக அர்ஜுன் அகர்வால் – சிபி கார்த்திக் – தமோட்சு கோசானோ உள்ளிட்டவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அனிமேஷன் திரைப்படம் தான் இந்த ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’.
நிர்வாக தயாரிப்பு : மோக்ஷா மோட்கில்
சீனியர் புலராடியூசர்: ஜானி எமமோட்டோ
பல வருடங்களாக நாம் கேட்டு வரும் ராமாயண கதைகளம் தான் இப்படத்தின் கதையும்.
ராமரின் வாழ்க்கை மற்றும் காலங்களை படம் ஆலோசிக்கிறது.
தசரத மன்னன் தனது மூன்று மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுக்கும் காலத்திலிருந்து தொடங்கி, அயோத்தியில் கூனியின் நிகழ்வில் கைகேயி, பல ஆண்டுகளுக்கு முன்பு மன்னன் துன்பத்தில் இருந்தபோது அரசனால் வாக்குறுதியளிக்கப்பட்ட இரண்டு வரங்களைக் கேட்கும் நிகழ்வுகளைக் காட்டுகிறது.
நாடுகடத்தல், இராவணனால் சீதையைக் கடத்துவதற்கு வழிவகுக்கும் சூர்ப்பனகாவின் நுழைவு.
ராவணனின் பிடியில் இருந்து சீதையை மீட்க ராமர் எடுத்த முயற்சிகள் பற்றி பேசுகிறது.
ராமணயத்தை அனிமேஷயில் மிக அற்புதமாக காட்சி படுத்தியுள்ளனர். குறிப்பாக அனிமேஷன் தரத்தில் இருந்து ஒவ்வொரு விஷயமும் மிக அற்புதமாக படமாக்கியுள்ளனர்.அதோடு அனிமேஷன் தொழில்நுட்பம் இரண்டும் குறிப்பிடத்தக்கது. மாபெரும் இதிகாசத்தை பாராட்டத்தக்க விதத்தில் விவரிக்கும் திரைக்கதை விரிவடையும் விதம் குறித்தும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.படத்திநடுத்த மிக பெரிய பலம் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்தவர்கள் மிக அற்புதமான முறையில் குரல் கொடுத்துள்ளனர்.
ஒரு அனிமேஷன் படத்துக்கு தேவையான ஒவ்வொரு விஷயத்தையும் இயக்குனர் யுகோ சகு மற்றும் ராம் மோகன் இன்றைய சூழ்நிலைக்கு குழந்தைகளுக்கு மிகவும் தேவையானஒரு மிகசிறந்த படம் தான் தி ராமாயணம் லெஜண்ட் ட்ராமா