சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர்.
2017-ம் ஆண்டு முதல் ஆன்லைன் வகுப்புகளை வெற்றிகரமாக நடத்தி வரும் ராம்கி ஐஏஎஸ் அகாடமி, மாணவர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் ஆர்வலர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, அண்ணாநகரில் 13-வது பிரதான சாலையில் புதிய மையத்தைத் திறந்துள்ளது. நிபுணர்களின் சிறப்பு பயிற்சி மற்றும் மாணவர்கள் மீது தனிப்பட்ட கவனம் ஆகியவை இந்த நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் ஆகும். சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது குறித்து பேசிய ராம்கி ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் ராமகிருஷ்ணன், “ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன், ஆனால் அந்த கனவை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, என்னைப் போன்ற ஆர்வலர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க விரும்பினேன். இந்த தொலைநோக்குப் பார்வையில் உருவானதுதான் ராம்கி ஐஏஎஸ் அகாடமி”, என்றார்.இந்த கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்று சிவில் சர்வீசஸ்களுக்கு தேர்வாகும் மாணவர்கள் தங்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம். ராம்கி ஐஏஎஸ் அகாடமியின் தனித்துவமான மற்றும் முக்கிய அம்சங்களில் இது ஒன்றாகும்.

