தேஜா இயக்கத்தில் பாகுபலி புகழ் ராணா – காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள தெலுங்கு படம், ‘நேனே ராஜு, நேனே மந்திரி’. இப்படம் தமிழில் ‘நான் ஆணையிட்டால்’ என்ற பெயரில் வெளிவருகிறது.
இந்த படத்தின் டிரைலரில், “100 எம்.எல்.ஏ.க்களை கூட்டிக்கிட்டு போய் ரிசார்ட்டுல உட்கார வச்சா நானும் சி.எம்.தான்” என்று ராணா பேசும் வசனம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணாவிடம் இது பற்றி கேட்ட போது, “என் தாத்தா ராமாநாயுடு முதலில் தெலுங்கில் தயாரித்து, என்.டி.ராமாராவ் நடித்த ‘ராமடு பீமடு’ படம் தான் தமிழில் எம்.ஜி.ஆர். நடிப்பில் ‘எங்க வீட்டு பிள்ளை’யாக வந்தது. இந்த தலைப்பில் நான் நடிப்பது பெருமை.
நான் ஏன் அரசியலுக்கு வருகிறேன். என்ன நடக்கிறது. நான் முதல்வர் ஆனேனா என்பதுதான் இதன் கதை. அரசியல் படம் என்பதால் காலத்துக்கு ஏற்றபடி இந்த வசனத்தை இயக்குனர் வைத்திருக்கிறார்.
பல மாநில அரசியல், நிஜ சம்பவங்கள் வேறு மாதிரி இருக்கும். முதல் முறையாக வேட்டி கட்டி தமிழக ஸ்டைலில் நடித்திருக்கிறேன். மற்றபடி எனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்று கூறினார்.
இயக்குனர் தேஜா, “உண்மையில் ரிசார்ட்ஸ் வசனக் காட்சிகளை எடுத்த போது ஜெ., உயிரோடு இருந்தார். அப்புறம், அரசியல் சூழ்நிலை மாறி விட்டது. ஆனாலும் அந்த டயலாக் பக்காவாக பொருந்துகிறது. தமிழக நிலவரத்துக்கு தக்கப்படி சில காட்சிகளை ரீ ஷூட் செய்தோம்.” என்றார்.