full screen background image
Search
Saturday 23 November 2024
  • :
  • :

ராயன் திரைவிமர்சனம்

ராயன் திரைவிமர்சனம்

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 50வது படம் தான் ராயன். இப்படத்தை இவரே இயக்கியிருக்கிறார்.

 

ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஓம் பிரகாஷ்.

இந்த படத்தின் நாயகனாகவும் இயக்குனராகவும் நடித்துள்ளார் தனுஷ் மேலும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், திலீபன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.சன்பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

கதைக்குள் போகலாம் …

தென் தமிழகத்தில் ஒரு கிராமப்புறத்தில் ஆரம்பமாகிறது படத்தின் கதை. நான்கு குழந்தைகளுடன் ஏழ்மை வாழ்க்கை வருகின்றனர் ஒரு தம்பதியினர். ஊருக்குச் சென்று வருவதாக கூறிச் செல்லும் பெற்றோர் வீட்டிற்கு திரும்பவில்லை.

நால்வரில் மூத்தவரான ராயன், தனது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கையை அழைத்துக் கொண்டு வட சென்னை வருகிறார். அங்கு கடுமையாக உழைத்து தம்பிகள் மற்றும் தங்கையை வளர்க்கிறார்.

ராயனாக வருபவர் தான் தனுஷ். இவரது தம்பிகளாக வருபவர்கள் சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம். தங்கையாக வருபவர் துஷாரா விஜயன்.
அதே ஏரியாவில் இரண்டு கேங் இருக்கிறது. சரவணன் கேங் மற்றும் எஸ் ஜே சூர்யா கேங்.

எஸ் ஜே சூர்யாவின் தந்தையை சரவணன் கொன்று விட, சரவணனை கொல்ல எஸ் ஜே சூர்யா காத்திருக்கிறார்.இவர்கள் இருவரின் சண்டையை எதிர்பார்த்து காத்திருக்கிறார் போலீஸ் உயரதிகாரியான பிரகாஷ்ராஜ்.இந்த சூழலில், சரவணனின் மகனை சந்தீப் குடி போதையில்கொன்று விடுகிறார். இதனால் கோபமடையும் சரவணன், சந்தீப்பை கொல்ல நினைக்கிறார்.

தம்பிக்காக சரவணனை கொன்று விடுகிறார் தனுஷ். தனுஷின் இந்த வெறியைக் கண்ட எஸ் ஜே சூர்யா, தன்னுடைய கேங்கில் வந்து சேர சொல்ல, அதை தவிர்த்து தனது குடும்பம் தான் முக்கியம் என்று எஸ் ஜே சூர்யாவை விட்டு ஒதுங்குகிறார்.ஆனால், எஸ் ஜே சூர்யா தொடர்ந்து தனுஷிற்கு இன்னல்களை கொடுத்து வருகிறார். எஸ் ஜே சூர்யாவை எப்படி தனுஷ் சமாளித்தார்..?? துஷாராவின் திருமணத்தை தனுஷ் செய்து முடித்தாரா .??? என்பதே படத்தின் மீதிக் கதை.

இயக்குனர் தனுஷ் படத்தின் ஆரம்பத்திலே கதைக்குள் சென்று விடுகிறார் படைத்தல் தேவையில்லாத பாடல் காட்சிகள் தேவையில்லாத காதல் காட்சிகள் இல்லாமல் கதைக்கு என்ன தேவை என்பதை புரிந்து செயல்பட்டுள்ளார் அசுரன் புதுப்பேட்டை வடசென்னை படங்கள் எல்லாம் தோற்கும் அளவுக்கு அற்புதமான திரைக்கதையும் கதைக்களமும் அமைத்துள்ளார். இயக்குனர் தனுஷ் படத்தின் காகதாபாத்திரங்கள் மி நேர்த்தியாக தேர்வு செய்துள்ளார்.ஒவ்வொரு நட்சத்திர தேர்வும் படத்தின் கதை ஓட்டத்துக்கு பலம் சேர்த்து இருக்கு. குறிப்பாக துஷார விஜயன்,எஸ்.ஜெ.சூர்யா, சரவணன், சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் இ.செல்வராகவன் போன்ற கதாபாத்திரங்கள் அருமை அனைவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்

பிரகாஷ் ராஜ் எத்தனையோ கதாபாத்திரங்கள் நடித்து இருந்தாலும் எத்தனையோயோ போலீஸ் கதாபாத்திரங்கள் ஏற்று இருந்தாலும் இது போல ஒரு பாத்திரம் அவர் செய்தது இல்லை என்று தான் சொல்லணும்.

துஷாரா விஜயன் பழைய நடிகை படாபட் ஷோபா போன்ற நாயகிகளின் நடிப்பை நம் கண்முன் நிறுத்துகிறார். இவரும் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று தான் சொல்லணும்.

இதேபோல எஸ்.ஜெ.சூர்யா, சரவணன், சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் இ.செல்வராகவன் போன்ற கதாபாத்திரங்கள் அருமை படத்தின் கதைக்கு ஏற்ப அவர்களின் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

தனுஷ் இவரை நாம் கொண்டாப்படவேண்டிய கலைஞன் இந்திய சினிமாவுக்கு இவர் வரப்பிரசாதம் இந்த நூற்றாண்டின் ஒரு தலை சிறந்த கலைஞன் என்று தான் சொல்லணும்.

தனுஷ் எப்படி ஒரு தலை சிறந்த நடிகர் இயக்குனரோ அதுபோல இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மேற்கத்திய இசை மட்டும் இல்லை நம் மண்ணின் இசையிலும் தலை சிறந்த இசை கொடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். இதற்க்கு முன் இவர் எத்தனை படங்கள் இசையமைத்து இருந்தாலும் இவரின் மிக சிறந்த படைப்பு இது தான் இந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்புங்க கண்டிப்பாக ஆஸ்கார் விருது கிடைக்கும்

எத்தனையோ படங்களை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து இருந்தாலும் இது தான் அவர்களின் ட்ரேட் மார்க்