கொலவெறி நடிகரை விட்டு பால் நடிகை விலக இதுதான் காரணமா?

Gossips

கொலவெறி நடிகரும், பால் நடிகையும் சேர்ந்து நடித்த படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட அதன் இரண்டாம் பாகத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தனர். இதனையடுத்து கொலவெறி நடிகரின் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் பால் நடிகை.

இதற்கிடையில், கொலவெறி நடிகரையும், பால் நடிகையையும் இணைத்து, வதந்திகளும், விமர்சனங்களும் பரவத் தொடங்கின. இது கொலவெறி நடிகரின் குடும்பத்தினரிடம் அதிருப்தியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, அந்த நடிகர், அப்படத்தின் இயக்குனரிடம் கலந்து பேசி, பால் நடிகையை படத்திலிருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும், இதையறிந்த அந்த நடிகை படத்திலிருந்து தானாகவே விலகிக் கொள்ள முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.