பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் அதுல் இந்தியா மூவீஸ் (Atul India Movies) தமிழ் திரைத்துறையில் கால்பதிக்கிறது

cinema news
குஜராத் திரைப்படத் துறை மற்றும் பாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற ஃபைனான்ஸியர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு.அதுல் போசாமியா, தற்போது  தமிழ் திரைப்படத் துறையில் தயாரிப்பாளராக தனது பயணத்தைத் துவங்குகிறார். அதுல் இந்தியா மூவீஸ் (Atul India Movies) நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் படத்தை  இயக்குநர் மிஷ்கின் அவர்களின்  முன்னாள் இணை இயக்குனர் அக்கலீஸ் இயக்குகிறார்.
 
அதுல் இந்தியா மூவீஸின் ஸ்ரீ அதுல் போசாமியா ஒரு தொழில்முனைவோராகவும், குஜராத் மற்றும் ஹிந்தி திரைப்படத் துறையில் நன்கு அறியப்பட்ட ஃபைனான்ஸியர்  மற்றும்  தயாரிப்பாளராக புகழ் பெற்றவராவார். பாலிவுட்டில்  சல்மான் கானுடன் பல படங்களில் பணிபுரிந்த டெய்சி ஷா முதல், பிரதீக் காந்தி (1992 ஸ்கேம் வெப் சீரிஸ் புகழ்) மற்றும் அந்தந்த திரைப்படத் துறையைச் சேர்ந்த பெரிய பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். திரைப்படங்கள் மட்டுமல்லாது தற்போது 3 வெப் தொடர்களையும் தயாரித்து வருகிறார், அவை  தற்போது தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் நடந்து வருகின்றன. இயக்குநர் மிஷ்கினின் முன்னாள் அசோசியேட்டான அக்கலீஸ்  இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அதுல் இந்தியா மூவிஸ் தயாரிப்பாளர் அதுல் போசாமியா கூறுகையில்.., 

“புகழ் பெற்ற தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராக எனது பயணத்தைத் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்த் திரைப்படங்கள் அதன் வலுவான உள்ளடக்கம் சார்ந்த கதைக்களங்கள், அற்புதமான கதைசொல்லல் மற்றும் திறமையான நடிகர்களின் உழைப்பால்  பான்-இந்திய அளவில் ரசிகர்களை மகிழ்விக்க தவறியதில்லை. அதுல் இந்தியா மூவீஸ்  தமிழ்த் திரையுலகின் குடும்பத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம், மேலும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் மதிப்புமிக்க படைப்புகளை  தொடர்ந்து தயாரிப்போம். எங்களின் முதல் தயாரிப்பை அறிமுக இயக்குநர் அக்கலீஸ் இயக்குகிறார். அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் ஸ்கிரிப்டை விவரித்தபோது, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவர்ந்திழுக்கும் அம்சங்கள் கதையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது.  படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்” என்றார்.

தொழில்நுட்பக் குழுவில் ஹிட்டன் திரிவேதி (கிரியேட்டிவ் டைரக்டர்), அமித் ஷியானி (இணைத் தயாரிப்பாளர்) மற்றும் ராஜேஷ் தாக்கூர் (இணைத் தயாரிப்பாளர்) ஆகியோர் பணியாற்றுகின்றனர். மேலும் இப்படத்தில் பணிபுரிய தமிழ் திரையுலகில் உள்ள சில பெரிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.