full screen background image
Search
Thursday 19 December 2024
  • :
  • :
Latest Update

சென்னையைச் சேர்ந்த 11 வயது இளம் வீரர் ரிவான் தேவ் பிரீத்தம், இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப்

ரிவான் தேவ் பிரீத்தம்(International Karting Championship)

சென்னையைச் சேர்ந்த 11 வயது இளம் வீரர் ரிவான் தேவ் பிரீத்தம், இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் (International Karting Championship) பட்டத்தை இருமுறை வென்றுள்ளார். மேலும், 2024 அக்டோபர் மாதத்தில் ஸ்பெயின் நாட்டின் வலென்சியாவில் நடைபெற்ற FIA மோட்டார்ஸ்போர்ட் கேம்ஸில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார்.

 

இளம் சாதனையாளரான ரிவான் இன்று தமிழ்நாடு மாநில மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் இளம் வீரருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள காசோலையை
துணை முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார்.

தமிழக அரசின் புதிய முன்னோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தின் கீழ், மோட்டார் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர் ஒருவருக்கு அரசு நிதியுதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இச்சாதனை, தமிழக விளையாட்டுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.