full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

“ரியாமிகா” என்றால் “ஒரிஜினல்” – “X- Videos” Heroine Talk..

சமீபத்தில் வெளியான “X வீடியோஸ்” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரியாமிகா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பெங்களூரு பெண்ணான இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தவர். சொல்லப்போனால் அம்மாக்களுக்கு கைவிட்டுப்போன நடிக்கும் ஆசையை நிறைவேற்ற மகள்கள் களத்தில் குதிப்பார்களே, அப்படி வந்தவர் தான் ரியாமிகாவும். கேமராமேன் பாலசுப்ரமணியன் இவர்களது குடும்ப நண்பர் என்பதும் இவர் சினிமாவுக்கு(ள் ) வர ஒரு காரணம்..

படிக்கும்போதே சில விளம்பர படங்களிலும் நடித்துள்ள ரியாமிகாவுக்கு “குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்” என்கிற படம் தான் அறிமுகம் கொடுத்தது. ஆனால் தற்போது வெளியான “X வீடியோஸ்” படம் ஓரளவு அடையாளத்தையும் கொடுத்துள்ளது.

“X வீடியோஸ்” படத்தின் இயக்குனர் இவரை ஒப்பந்தம் செய்தபோது முழுக்கதையையும் சொல்லாமல் இவர் நடிக்கும் காட்சிகளை மட்டும் சொல்லி சம்மதிக்க வைத்தாராம். அதுமட்டுமல்ல படத்தில் ஒப்பந்தமான பின்னரே படத்தின் டைட்டிலே என்னவென்று ரியாமிகாவுக்கு தெரியவந்ததாம் . ஆரம்பத்தில் லைட்டாக ஜெர்க் ஆனாலும், அந்தப்படத்தில் முழு ஈடுபாட்டுடன் தனது நடிப்பை வழங்கியதாக கூறுகிறார் ரியாமிகா..

“முழுப்படத்தை பார்த்ததும் தான் என்னுடைய காட்சிகளை கதையுடன் எப்படி இணைத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. திரையுலகில் ஒருபக்கம் பாராட்டுக்கள் வந்தாலும், நெருங்கிய நட்பு வட்டத்தில் இந்தப்படத்தில் நீ நடித்திருக்கத்தான் வேண்டுமா? என சில நெகட்டிவ் விமர்சனங்களும் கிடைத்தன. இருந்தாலும் ஒரு விழிப்புணர்வு படத்தில் நடித்தோம் என திருப்திப்பட்டு கொண்டேன். இனிவரும் நாட்களில் முழு கதையையும் கேட்டு விட்டே நடிக்க திட்டமிட்டுள்ளேன்” என்கிற ரியாமிகா, இனி அடுத்தடுத்து ஒப்புக்கொள்ள போகும் படங்களில் தனது கேரக்டர்களிலும் கவனம் செலுத்தப்போவதாக சொல்கிறார்.

“X வீடியோஸ்” படத்த்தை தொடர்ந்து “அகோரி” என்கிற படத்த்திலும் நடித்து முடித்துவிட்டார் ரியாமிகா. ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் மொத்தமே ஐந்து கேரக்டர்கள் தான் என்பதும் அதில் ரியாமிகா ஒருவர்தான் பெண் என்பதும் ஆச்சர்யமான செய்தி.

“இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் சுமார் ஒரு மாதம் நடந்தது.. ஒவ்வொருவருக்கான காட்சியாக மாற்றி மாற்றி எடுத்ததால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் அங்கே வேடிக்கை பார்க்க வந்த பசங்களுக்கு கிளாசிக் டான்ஸ் கற்றுக்கொடுத்தேன்.. மீதி நேரங்களில் நான் உட்பட மற்ற நடிகர்களும் ஒரு டெக்னீஷியனாகவும் இறங்கி வேலை பார்த்தோம்” என்கிறார் ரியாமிகா

“மாயவன்” படத்தை தொடர்ந்து சி.வி.குமார் இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் ரியாமிகா. ஆனால் இவரை சி.வி.குமார் முதலில் அழைத்தது தான் தயாரிக்கபோகும் படத்திற்காகத்தான். அப்படியே ஒன் பிளஸ் ஒன் ஆஃபராக, தான் இயக்கும் படத்திலும் இவருக்கு வாய்ப்பை கொடுத்துவிட்டாராம்.

“என் படங்களை பார்த்தவர்கள், இயல்பாக நடிக்கிறீர்களே, நீங்கள் கூத்துப்பட்டறை ஆர்ட்டிஸ்ட்டா என அடிக்கடி கேட்பதுண்டு.. அதனாலேயே அங்கே என்னதான் சொல்லித்தருகிறார்கள் என பார்க்கும் ஆர்வம் அதிகமாகி, நமக்கு தெரியாத ஒன்றை கற்றுக்கொள்ளும் ஆசையில் இப்போது கூத்துப்பட்டறையில் பயிற்சிக்காக சேர்ந்துவிட்டேன்” என்கிற ரியாமிகா ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஜிம், சிலம்பம், டான்ஸ் கிளாஸ், நடிப்பு பயிற்சி என காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழல்கிறார்.

ரியாமிகாவுக்கு பிடித்த நடிகை என்றால் பாலிவுட்டில் கங்கனா, கோலிவுட்டில் நயன்தாரா, அனுஷ்கா தானாம். ரியாமிகா என்றால் என்ன என்று பெயர்க்காரணம் கேட்டால் “ஒரிஜினல்” என்று அர்த்தம் சொல்லி சிரிக்கிறார்.