அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இந்த வரம் திரைக்கு வந்த படம் “ராக்கி”.அருண் மாதேஸ்வரன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தியாகராஜன் குமாரராஜா திரைப்படத்தில் அவருக்கே உரிய நேரம் காலம் என தனக்கென்ன தனி உலகத்தியே உருவாக்கிக்கொள்வார் அது போல அருண் மாதேஸ்வரனும் ராக்கி திரைப்படத்தில் தனக்கென்ன தனி உலக்தியே உருவாக்கியுள்ளார்.ரவுடிசம் செய்து வரும் பாரதிராஜாவுடன் வேலை பார்த்து வருகிறார் வசந்த் ரவி. பாரதிராஜாவின் மகனுக்கும் வசந்த் ரவிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் வசந்த் ரவியின் அம்மா ரோகிணியை கொலை செய்து விடுகிறார். இதனால் கோபமடையும் வசந்த் ரவி, பாரதிராஜா மகனை கொல்கிறார்.ஜெயிலுக்கு சென்று பல ஆண்டுகள் கழித்து திரும்பும் வசந்த் ரவி, திருந்தி வாழ முயற்சி செய்கிறார். ஆனால், பாரதிராஜா வசந்த் ரவியை கொலை செய்ய துடிக்கிறார். இறுதியில் பாரதிராஜா வசந்த் ரவியை கொலை செய்தாரா? வசந்த் ரவி பாரதிராஜாவின் தொந்தரவை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் வசந்த் ரவி, வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மா, தங்கை பாசம், சண்டை, ஏக்கம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். தங்கையாக வரும் ரவீனா சிறிய கதாபாத்திரம் என்றாலும் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். படம் பார்ப்பவர்களை தன் மீது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார். தாயாக வரும் ரோகிணி தனக்கே உரிய நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார் .மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.ரவுடிசம், பழிக்கு பழி வாங்கும் கதையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.வழக்கமான கதைக்கு மிக சிறந்த திரைக்கதையை கொடுத்தது சிறப்பு .ஸ்ரேயாஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்