ராபர் – திரைவிமர்சனம்
இந்த வார ரிலீஸில் ஒரு தரமானபடமென்று ராபர் படத்தை சொல்லலாம் ஒரு விறுவிறுப்பான திரில்லர் மற்றும் தாய் பாசத்தை மையமாக வைத்து வெளிவந்து இருக்கும் படம் தான் ராபர்
மெட்ரோ படத்தினை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் கதை மற்றும் வசனத்தில் எஸ் எம் பாண்டி அவர்களின் இயக்கத்தில் சத்யா, டேனியல் அனி போப், தீபா சங்கர், ஜெயபிரகாஷ், பாண்டியன், சென்ராயன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ”ராபர்”.
இப்படத்திற்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஜோகன் இசை அமைத்திருக்கிறார். கவிதா மற்றும் ஆனந்த கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்கள்.
மெட்ரோ படத்தின் கதையை மூலமாக வைத்து அதன் தொடர்ச்சியாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறது படக்குழு.
நாயகன் சத்யாவின் அம்மாவாக வருகிறார் தீபா சங்கர். கிராமத்தில் சின்ன சின்ன ராபரி வேலைகளை செய்து வந்த சத்யா, சென்னைக்கு வருகிறார். சென்னையில் தனியாக வீடு எடுத்து bpo அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார் சத்யா.
காமத்துக்கு அடிமையாகும் சத்யா உல்லாசமாக இருப்பதற்கு வாங்கும் சம்பளம் கை கொடுக்காததால் மீண்டும் தனது கைத்தொழிலான ராபரி வேலையை செய்ய தொடங்குகிறார். சிநின்னதாக செய்து இருந்த சத்யா அலுவலகப் பணி முடிந்து வந்ததும் மாலை நேரத்தில் ராபரி வேலையை முழுமையாக செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். குறிப்பக ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் ஆண்கள் மற்றும் பெண்களிடம் நகை பறிப்பதை முழுமையாக செய்து வருகிறார்.
பறித்த நகைகளை விற்க ஆள் தேடும் நேரத்தில் திருட்டு நகை வாங்குவதில் மிகப்பெரும் கையாக வந்து நிற்கிறார் டேனியல் அனி போப். அவரின் டீமின் பழக்கம் கிடைக்க, அங்கு நகைகளை விற்கத் தொடங்குகிறார் சத்யா.
சத்யாவிற்கும் டேனியல் அனி போப் இருவருக்கும் மறைமுகமாக மோதல் விழா ஆரம்பிக்கிறது இந்த மோதலில் இறுதியில் என்ன நடந்தது என்பதை படத்தின் மீதி கதை.
நாயகன் சத்யா,அவருக்கென உருவாக்குன கதாபாத்திரம் போல நடிபில் அசத்தி இருக்கிறார். சின்ன சின்ன ரியாக்ஷன்களை ஆங்காங்கே கொடுத்து கதையின் நாயகனாக நன்றாகவே ஜொலித்திருக்கிறார் சத்யா. இருந்தாலும் ஒரு சில காட்சிகளில் இன்னும் சற்று நன்றாக நடித்திருக்கலாம் என்ற எண்ணத்தையும் கொண்டு வந்து விட்டார் சத்யா.
படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டேனியல் அனி போப். வழக்கமான காமெடி கதாபாத்திரமாக இல்லாமல் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடத்தி இருக்கிறார். இக்கதாபாத்திரம் அவருக்கு நன்றாகவே பபொருந்தியிருக்கிறது.
மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெயபிரகாஷ் மற்றும் பாண்டியன் இருவரும் தங்களது அனுபவ நடிப்பை நன்றாகவே கொடுத்திருக்கிறார்கள். கிளைமேக்ஸ் காட்சியில் தீபா ஷங்கரின் நடிப்பு பார்ப்பவர்களின் கண்களை குலமாக்கியது.
மேலும், படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் நன்றாகவே நடித்து படத்திற்கு பலமாக நின்றிருக்கிறார்கள். படம் தொடங்கிய சிறிது நேரத்திலே திரைக்கதையின் வேகம் நம்மையும் படத்திற்குள் பயணப்பட வைத்துவிட்டது. ஆங்காங்கே சற்று தொய்வை படம் ஏற்படுத்தினாலும் கதையின் போக்கு நம்மை எந்த இடத்திலும் சலிப்படைய செய்யவில்லை.
ஒரு சில காட்சிகளை இன்னுமே சற்று தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணமும் எழுந்தது. படத்தின் மிகப்பெரிய பலம் என்று கூறினால் அது பின்னணி இசை தான் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் தனது பங்களிப்பை நன்றாகவே கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜெகன்.
படத்தின் ஒளிப்பதிவாளர் என உதயகுமார் தனது பங்கினை அழகாகவே கொடுத்திருக்கிறார். படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் உதயகுமார்.