full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

காஜலாக மாறிய சாய்பல்லவி

தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற `மாரி’ படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கிறது.

பாலாஜி மோகன் இயக்கவிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் `மாரி-2 படத்திற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

`மாரி’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து மார்க்கெட்டை தக்க வைத்துள்ளதால் அவருக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே மாரி-2 படத்தில் புதிய நாயகியை படக்குழு ஒப்பந்தம் செய்தனர்.

தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று இயக்குநர் பாலாஜி மோகன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதன் படி மாரி 2 படத்தின் நாயகியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக நேற்று மாலை தெரிவிக்கப்பட்டது.