மலையாளத்தில் வெளியான “பிரேமம்” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அடுத்தடுத்து மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பவரை தமிழுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் ஏ.எல்.விஜய் தான். தனது “கரு” ப்டத்தின் மூலம் தமிழுக்கு சாய் பல்லவியை அறிமுகப்படுத்துகிறார் அவர். “கரு” திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
அது மட்டுமல்லாமல், தனுஷ் நடிக்கும் “மாரி2” படத்திலும் இப்போது நடிக்கத் தொடங்கியிருக்கிறார் இப்போது. படப்பிடிப்பு தொடங்கிய நாளிலிருந்து ஒரே தனுஷ் புராணம் தான் பாடுகிறாரம் சாய் பல்லவி. சமீபத்தில் கூட அளித்திருக்கக் கூடிய பேட்டியொன்றில் கூட தனுஷ் புகழைப் பாடியே பேசியுள்ளார்.
“அவர் மிகத் திறமையான நடிகர். சாதாரணமாக அவரைப் பார்க்கும் போது எளிமையகவே இருப்பார், குழந்தைத் தனமாய் பேசுவார். அதே நேரத்தில் நடிப்பு என்று வரும் போது வேறு மாதிரியான ஆளாக முற்றிலுமாக மாறிவிடுவார். அவரிடமிருந்து கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது” என்று புகழ்ந்து தள்ளுகிறார்.
வாயுள்ள பிள்ளை.