full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ரகுல் ப்ரீத்துக்கு பிறகு சாய்பல்லவி

தமிழில் சாய் பல்லவி அறிமுகமாகும் முதல் படமான `தியா’ வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாய் பல்லவி தற்போது தனுஷின் `மாரி-2′ படப்பிடிப்பில் பிசியாகி இருக்கிறார்.

சென்னை பின்னி மில்லில் நடந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அவரது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு அடுத்த மாதம் இரண்டாவது பாதியில் சாய் பல்லவி சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.

என்ஜிகே படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிவிட்டதாகவும், சூர்யாவுடன் தானும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் ரகுல் ப்ரீத்தி சிங் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி ரகுல் ப்ரீத்தி சிங் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்க திட்டமிட்ட செல்வராகவன் அதற்கான பணிகளில் பிசியாகி இருக்கிறாராம்.

ரகுல் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்த பிறகு சாய் பல்லவி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர சர்வானந்த் ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவும் சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருக்கிறார்.