போட்டியா? பொறாமையா? என்று எல்லோரையும் பேச வைத்திருப்பவர்கள் சிவகார்த்திகேயனும், சந்தானமும்.
தொலைக்காட்சியில் புகழ்பெற்று, வெள்ளித் திரையில் காமெடி நடிகர்களாகத் தான் அறிமுகமானார்கள் சிவகார்த்திகேயனும், சந்தானமும். ஆனால் சந்தானத்தின் வளர்ச்சியை விட சிவகார்த்திகேயனின் வளர்ச்சி யாருமே நினைத்துப் பார்க்காதது.
சிவாவின் குறுகிய கால வளர்ச்சி சந்தானத்தை என்ன செய்ததோ, காமெடி டிராக்கிலிருந்து ஹீரோவாக அவதாரமெடுத்தார். என்னதான் உருண்டு பொரண்டாலும் ஒட்டுற மண்ணுதானே ஒட்டும்?
அதுபோலத் தான் சந்தானத்தின் ஹீரோ அவதாரமும் அமைந்தது.
எப்படியாவது தன்னை நிரூபித்துவிட வேண்டும் என்று, பெரிய பட்ஜெட்டில் படமெடுத்து அதை சிவகார்த்திகேயன் படத்துடனே ரிலீஸ் செய்து பலப்பரீட்சை செய்கிறார் சந்தானம்.
இன்றைக்கு முழுக்க வேலைக்காரன் மற்றும் சக்கப் போடு போடு ராஜா இரண்டு படங்களைப் பற்றிதான் பேச்சு. எது வெற்றிபெரும் என்ற எதிர்பார்ப்பு எல்லா ரசிகர்களுக்கும் இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் “சக்கப்போடு போடு ராஜா” படத்திற்கு வாழ்த்து செய்தி ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்தப்பதிவை ரீட்வீட் செய்துள்ள சந்தானம் “வேலைக்காரன்” படத்திற்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பத்து நாள் முன்னாள் வரை, போட்டியா பொறாமையா என்று பேசி வந்தவர்கள், இப்போது பாசமா? பாசாங்கா? என்று பேச ஆரம்பித்துள்ளனர். எது எப்படியோ, இந்த வகையான ஆரோக்கியமான செயல்கள் நல்லது தானே??