சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்” படத்தின் டிரெய்லர்,

cinema news Trailers

ஹோம்பாலே ஃபிலிம்ஸ், “சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்” படத்தின் டிரெய்லர், அதிரடி ஆக்சன் அதகளத்துடன் வெளியானது 

பிரபாஸின் நடிப்பில் இந்தியாவே எதிர்பார்க்கும் “சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்” படத்தின் டிரெய்லர் வெளியானது

ஹோம்பாலே பிலிம்ஸ் சலார்: பார்ட் 1 சீஸ்ஃபயர் படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்தே படத்தின் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. அவ்வப்போது சிறு சிறு அப்டேட்களால் ரசிகர்களின் ஏக்கத்தை போக்கி வந்த தயாரிப்பாளர்கள் தற்போது, இறுதியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின் அதிரடியான ஆக்சன் மிகுந்த டிரெய்லரை, இரவு 7:19 மணிக்கு வெளியிட்டனர்.

பிரபாஸ் நடிப்பில் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின் டிரெய்லர் முழுக்க முழுக்க திரில், அதிரடி மற்றும் ஆக்சன் கலந்த பெரிய விருந்தாக வெளி வந்துள்ளது. பிரசாந்த் நீலின் ஆக்ஷன் நிறைந்த உலகத்தைப் பற்றிய ஒரு பரந்த பார்வையை அளிக்கும் இந்த டிரெய்லர், உண்மையிலேயே பார்வையாளர்களாகிய நம் கற்பனையைத் தாண்டி, ஒரு பெரும் உலகைக் காட்டுகிறது. நடிகர் பிரபாஸின் முத்திரையான அதிரடி மாஸ் ஆக்ஷன் என அனைத்தையும் இந்த டிரெய்லர் அட்டகாசமாக காட்சிப்படுத்துகிறது. சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் இந்த ஆண்டின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று டிரெய்லர் உறுதிப்படுத்துகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ், சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 22, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.