full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

சல்மான் கான் தான் குற்றவாளி.. பரபரப்பு தீர்ப்பு!!

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் நடிப்பில் கொடி கட்டி பறந்தாலும் பல்வேறு சர்ச்சைகளிலும் இவர் சிக்கி கொண்டவர்.

அவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. அதில் மான்களை வேட்டையாடிய வழக்கும் ஒன்றாகும்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் “ஹம் சாத் சாத் ஹயன்” என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி நடந்தது.

அன்று இரவு அரிய வகை மான்கள் இரண்டை படப்பிடிப்பில் இருந்த நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதேபோல நடிகர் சயீப்அலிகான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக ஜோத்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இறுதிக்கட்ட வாதம் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி தொடங்கியது. அரசு தரப்பிலான வாதம் அக்டோபர் 23-ந்தேதி முடிவடைந்தது. சல்மான்கான் தரப்பிலான வாதம் அக்டோபர் 28-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந்தேதிவரை நடந்தது.

குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களின் வாதமும் கடந்த 24-ந்தேதியுடன் முடிவடைந்தது. அனைத்து தரப்பின் இறுதி வாதம் முடிவடைந்ததை தொடர்ந்து 5-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று ஜோத்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அறிவித்தது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மான்வேட்டை வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என அறிவித்தார். குற்றம்சாட்டப்பட் மற்ற அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தீர்ப்பு வெளியாவதையொட்டி சல்மான் கான் தனது பாதுகாவலருடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார். அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

சல்மான்கான் மீதான கடைசி மான்வேட்டை வழக்கு இதுவாகும். கடந்த ஆண்டு ஆயுத சட்ட வழக்கில் அவரை ஜோத்பூர் கோர்ட்டு விடுவித்து இருந்தது. மேலும் சின்கரா மான்வேட்டை வழக்கிலும் விடுவிக்கப்பட்டு இருந்தார்.