full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சாம் சி.எஸ் உடன் கைகோர்த்த யுவன்!!

 

தமிழ் சினிமாவில் புதுப்புது இசையமைப்பாளர்கள் வருவது வெகு இயல்பான ஒன்று. ஆனால், அவர்களில் யார் நிலைத்து நிர்கிறார்கள் என்பதே முக்கியம். அப்படி கடந்த சில ஆண்டுகளில் அறிமுகமான இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவராக இருப்பவர் சாம் சி.எஸ்.

“விக்ரம் வேதா” திரைப்படத்தில் “தனதனனா” என விஜய் சேதுபதிக்கு மாஸ் பீஜிஎம் போட்டு தெறிக்க விட்டவர், “யாஞ்சி யாஞ்சி” என மாதவனின் காதலில் குழைய வைத்தார். தொடர்ந்து “புரியாத புதிர்”, “இரவுக்கு ஆயிரம் கண்கள்”, “லக்ஷ்மி” என வரிசையாக நல்ல இசையினைத் தந்து ரசிகர்களின் நெஞ்சில் நிலையான இடம் பிடித்திருக்கிறார்.

இப்போது இவர் இசையமைத்திருக்கும் “வஞ்சகர் உலகம்” திரைப்படம் வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவர இருக்கிறது . இந்த படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம், யுவனை அணுகியுள்ளார். யுவனும் “ஓகே” சொல்ல, தன் இசையில் அந்த ரொமான்டிக் மெலோடியை யுவனை பாட வைத்துள்ளார்.

விரைவில் வெளிவரும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.