full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மகாநதி ரகசியம் ! சொல்ல மறுத்த சமந்தா

திருமணத்திற்கு பிறகு மாறுபட்ட வேடங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். வித்தியாசமான வேடம் உள்ள படத்தில் தான் நடிக்க ஒப்புக்கொள்கிறார்.

தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி அவர் பேசிய போது, “ராம்சரணுடன் நடித்துள்ள ‘ரங்கஸ்தலம்’ படத்தில் எனக்கு இது வரை நான் நடிக்காத மாறுபட்ட வேடம். நான் வாழ்ந்து பாத்திராத கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். இதில் நடித்தேன் என்பதைவிட கிராமத்து பெண்ணாக வாழ்ந்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். ‘மகாநதி’யில் நான் ஜமுனா வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அது உண்மையல்ல. அதில் நான் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறேன். அது என்னவென்று இப்போதே சொல்லி சஸ்பென்சை உடைக்க விரும்பவில்லை.

கன்னடத்தில் வெளியான ‘யுடர்ன்’ ரீமேக்கில் நடிக்கிறேன். கன்னட படத்தில் நடித்த நாயகியை விட மாறுபட்டு தனிபாணியில் நடிக்கிறேன். ‘யுடர்ன்’ கன்னட படத்தை பார்த்தவர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் எனது பாத்திரம் இருக்கும். இதுபோல் ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறேன்”.