full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

எதிர்ப்புகளுக்கு சமந்தா பதிலடி

பாராட்டுகள் என்னை சோம்பேறியாக்குகின்றன என்று எதிர்ப்புகளுக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார

 

 

 

 

 

கொரோனா ஊரடங்கில் சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகமாக எதையுமே பகிரவில்லை. சில தினங்களுக்கு முன்பு பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பதிவால் பெரும் சர்ச்சை உருவானது.

அந்தப் பதிவுக்கு சமந்தாவின் ரசிகர்கள் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இந்திய அளவில் டிரெண்ட் செய்தார்கள். இதனிடையே ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார் சமந்தா. அதில் ரசிகர் ஒருவர், “உங்களை வெறுப்பவர்களுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சமந்தா பதில் கூறியிருப்பதாவது:-

 

 

 

 

 

 

உங்களின் துரதிர்ஷ்டம். நீங்கள் எனக்கு உத்வேகத்தைக் கொடுக்கிறீர்கள் என்பதை உணரவில்லை. பாராட்டுகள் என்னை சோம்பேறியாக்குகின்றன. அவமானங்கள் என்னைச் சிறப்பாகச் செயல்பட வைக்கின்றன என்பதையும் நீங்கள் அறியமாட்டீர்கள். எனவே நன்றி”. இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.