full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’!

பிக்பாஸ்‘ நிகழ்ச்சியைத் தொடர்ந்து  விஜய் தொலைக்காட்சி ‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை  முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
 
இதில், 40 நாட்கள் கிராமத்துக்கு சென்று அங்கு வேலை செய்து அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை வைத்து  எந்தவித வசதியும் இல்லாமல்  அன்றாடம் வாழ்க்கை நடத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதில், 12 பெண்கள்  கலந்து கொள்கின்றனர். இதுவரை கிராமத்து பக்கமே போகாத இந்த பெண்களை வைத்து முதன் முறையாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
 
ஒவ்வொரு வாரமும், இறுதியில் கிராமத்து மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். போட்டியின் இறுதி வெற்றியாளரை கிராம பஞ்சாயத்து முடிவு செய்யும்.
 
இந்த 12 பெண்களில் சினிமாவில் இருந்து கலந்து கொண்டுள்ள ஒரே பெண், நடிகை சனம் ஷெட்டி மட்டுமே.
 
 
பெங்களுரில் பிறந்து லண்டனில் சாப்ட்வேர் எஞ்சினியர் முடித்துள்ளார். லண்டனில் ஒரு டாக்குமெண்டரி மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அம்புலி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கதம் கதம், சவாரி, சதுரன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
 
அதை தொடந்து மலையாளம் , தெலுங்கு , கன்னடம் என 4 மொழிகளிலும் நடித்து வருகிறார். 2016ம் ஆண்டின் மிஸ்.சவுத் இந்தியா இரண்டாம் இடம் பெற்றார். நிறைய டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
 
 
 
தற்போது  கன்னடத்தில் அதர்வா, தமிழில் டிக்கெட், மேகி போன்ற நடித்து வரும் நிலையில் , தற்போது விஜய் தொலைக்காட்சி துவங்கியிருக்கும் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் ஒரு கண்டெஸ்டண்டாக கலந்து கொண்டுள்ளார்.
 
அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.