full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

நிபந்தனைகளுடன் சந்தானத்திற்கு ஜாமீன்

கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கான சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில், சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியை சேர்ந்த, கட்டிடங்களை கட்டி விற்பனை செய்யும் பில்டராக தொழில் செய்து வரும் சண்முகசுந்தரத்திற்கும், சந்தானத்திற்கும் தகராறு இருந்து வந்திருக்கிறது.

இந்நிலையில், சந்தானம், வளசரவாக்கத்தில் உள்ள சண்முகசுந்தரத்தின் அலுவலகத்திற்குச் சென்ற போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கி கொண்டதாகவும் மோதலில் அவர்கள் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் தன்னை தாக்கியதாக வளசரவாக்கம் போலீசில் சண்முக சுந்தரம் புகார் அளித்தார்.

இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த சந்தானத்திற்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இரண்டு வாரம் நேரம் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் கூறியுள்ளது.