இரண்டு ஜோடிகளுடன் சந்தானம். R.கண்ணன் இயக்கும் புதிய படம் !

News
0
(0)

Masala pix , M K R P Productions இணைந்து வழங்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி ( Tara Alisha berry ) நடிக்கிறார். சமீபத்தில் வெளியான A1 வெற்றிப்படத்தில் கதாநாயகியா நடித்த இவர்,  மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா ( Swathi Muppala ) அறிமுகம் ஆகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தினை- ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய
R.கண்ணன் இயக்கி வருகிறார். காதல், காமெடி, ஆக்‌ஷன், ஃபேண்டஸி கலந்த ஜனரஞ்சகமான படமாக இப்படத்தினை உருவாக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 60 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமான செட் போடப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி மாதத்தில் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் :

இசை – சந்தோஷ் தயாநிதி
ஒளிப்பதிவு – 96 புகழ் சண்முகசுந்தரம்
எடிட்டிங் – செல்வா
கலை – ராஜ்குமார்
சண்டைப்பயிற்சி – ஸ்டண்ட் சில்வா
நடனம் – சதீஷ் & டேனி
தயாரிப்பு நிறுவனம் – Masala pix & M.K.R.P Productions
தயாரிப்பு, இயக்கம் – R கண்ணன்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.