full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சந்தானம் முதன்முதலாக மூன்று வேடத்தில்  நடிக்க இருக்கும் புதியபடம் !!

தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் ஒரு  படத்தின்  அறிவிப்பு பெரிய சர்ப்ரைஸை தருகிறது. முதன்முதலாக சந்தானம்  மூன்று வேடமேற்று ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். சயின்ஸ் பிக்‌ஷன் பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்தின் கன்டெண்ட் முழுக்க முழுக்க ரசிர்களை சிரித்து மகிழ வைக்கும் என்கிறார்கள்

இதுவரைக்கும் உள்ள சந்தானம் காமெடிகளில் இது அதன் உச்சத்தை எட்டும் என்கிறார்கள். இப்படத்தை கே.ஜே ஆர் ஸ்டியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார், இவர் அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயாரித்து இருக்கிறார். மேலும் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படத்தையும், விஜய்சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க.பெ.ரணசிங்கம் படத்தையும் தயாரித்து வருகிறார்.  விஸ்வாசம் படத்தை தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வெளியீட்டவரும் இவரே.  இவரோடு சேர்ந்து சோல்ஜர் பேக்டரி கே.எஸ். சினிஸும் இப்படத்தின் தயாரிப்பில் பங்கு பெறுகிறார்.  இவர் ஜெய்-அஞ்சலி நடிப்பில் வெளியான பலூன் படத்தை இயக்கியவர்.

இப்படத்தின் பெயர் என்ன என்பதை வரும் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு  அறிவிக்க இருக்கிறது பட குழு .

இந்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளான படமாக இருக்கிறதுக்கு முக்கியமான காரணம் என்னவென்றால்  சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்பதோடு இப்படத்தை இயக்க இருப்பவர் மிகப் பிரபலமான எழுத்தாளர் கார்த்திக் யோகி என்பதும் தான்.  கார்த்திக் யோகி தமிழ்சினிமாவில் பல வெற்றிகரமான திரைக்கதைகளுக்கு உதவியாக இருந்தவர். இப்படக்குழுவினர் இது மிக வித்தியாசமான கிரியேட்டிவான படமாக இருக்கும் என்கிறார்கள். இப்படத்தில் நிச்சயம் சந்தானத்தின் ட்ரிபிள் அவதாரம் வேறலெவலில் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

வெகுவிரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. திறமை வாய்ந்த டெக்னிக்கல் டீமும் இண்ரஸ்டிங்கான  நட்சத்திர பட்டாளமும் இப்படத்தில் இணைய இருப்பது கூடுதல் செய்தி. அந்த விவரங்கள் வெகுவிரைவில் அப்டேட் செய்யப்படும் என்கிறது படக்குழு.  பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.