பாலியல் வன்கொடுமைகளை குறைக்க “இருட்டு அறையில் முரட்டு குத்து” இயக்குநரின் யோசனை!!

News

“ஹரஹர மஹாதேவ்கி” படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு புது வகையான “ரசனையை” அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சன்தோஷ் P ஜெயக்குமார். “அடல்ட் ஹியூமர்” என்று எகிடுதகிடாக வசனங்களாஇயும், காட்சிகளையும் வைத்து முதல் படத்திலேயே இவரை வைத்து காசு பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சும்மா இருப்பாரா?, “இந்தா அட்வான்ஸ் இன்னொரு படம் அதே போல எடு” என்று “ஃபுல் ஃப்ரீடம்” கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

“கரும்பு திண்ணக் கூலியா?” என ஒப்புக்கொண்டு, அடல்ட் ஹிமரோடு கொஞ்சம் ஹாரரையும் மிக்ஸ் செய்து பட்டாயாவிற்கு படையோடு கிளம்பினார் இயக்குநர் சன்தோஷ். 23 நாட்கள் சூட்டிங், கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, சாரா, யாசிகா ஆனந்த் மற்றும் பலர் அடங்கிய குழுவை அடக்கியாண்டு குறித்த நாளில் சூட்டிங்கை முடித்துத் தந்திருக்கிறார். அந்தப் படம் தான் “இருட்டு அரையில் முரட்டு குத்து”.

இப்படம் மே மாதம் வெளியாகும் என தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இயக்குநர் சன்தோஷ், கௌதம் கார்த்திக், சாரா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து படம் குரித்து பேசினார்கள். அப்போது பல கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டது.

ஏற்கனவே நாட்டில் பல கற்பழிப்புகள் தினந்தினம் நடந்து கொண்டிருக்கிறது, அப்படி இருக்கும் போது இது மாதிரியான “அடல்ட் ஜானர்” படங்கள் வருவது நல்லதா? என்ற கேள்விக்கு,

“நம் நாட்டில் எல்லாத்தையும் மறைச்சு மறைச்சு வச்சே தான் இன்னிக்கு இந்த நிலைமைக்கு வந்து நிக்குது. அப்படிப்பட்ட தவறுகளை செய்பவர்களுக்குத் தான் என் படத்தில் ஒரு மெசேஜ் வச்சிருக்கேன். அது வேற ஒன்னும் இல்ல, “தன் கையிலே சொர்க்கம் காணலாம்” என்பது தான்” என்று பதிலளித்தார்.

மேலும் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்த இயக்குநர் சன்தோஷ் P ஜெயக்குமார், ““ஹரஹர மஹாதேவ்கி”,“இருட்டு அரையில் முரட்டு குத்து” ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்கும் திட்டமும் இருப்பதாக கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அவர் தற்போது ஆர்யாவை வைத்து இயக்கி வரும் “கஜினிகாந்த்” முடிந்த பிறகு அதற்கான அறிவிப்புகள் வந்தாலும் வரலாம்.. பார்ப்போம்!!