full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அமைதி காத்த சாராவிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்

k

ஸ்ரீதேவி மகள் ஜான்வி ‘தடக்’ என்ற இந்தி படம் மூலம் நாயகியாகி இருக்கிறார். கரண்ஜோகர் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் நாயகனாக நடிக்கிறார்.

ரன்வீர்சிங் நாயகனாக நடிக்கும் ‘சிம்பா’ என்ற புதிய படத்தை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இதில் கத்ரீனாகைப், ஜான்வி, சாராஅலிகான், பிரியா பிரகாஷ் இவர்களில் ஒருவரை நாயகி ஆக்க அவர் திட்டமிட்டு இருந்தார். இதையடுத்து, விருப்பத்தை சொல்வதற்காக ஜான்வி, அவருடைய தோழியும் சயிப் அலிகானின் மகளுமான சாரா ஆகியோரிடம் கதையை கொடுத்து படித்துப் பார்க்கும்படி கூறினார்.

அதை படித்த சாரா எந்த கருத்தும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஆனால் ஜான்வி, “ ‘சிம்பா’ படத்தில் என்னை நடிக்க அழைக்கிறார்கள். ரன்வீர்சிங் போன்ற பெரிய ஹீரோக்களுடன் நடிக்க பயமாக இருக்கிறது” என்று மனதில் பட்டதை சிலரிடம் கூறி இருக்கிறார்.

இதை அறிந்த இயக்குனர் ரோஹித் ஷெட்டி, ஸ்ரீதேவி மகள் ஜான்வியை விட்டுவிட்டு சாராவை தனது படத்தின் நாயகியாக்கியுள்ளார். சாராவின் முதல் படமான ‘கேதர்நாத்’ பாதியில் நிற்கிறது. இந்த நிலையில் அவருக்கு ‘சிம்பா’ படவாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மையை வெள்ளை மனதுடன் சொன்ன ஜான்வி பெரிய படவாய்ப்பை இழந்த செய்தி, இந்தி பட உலகில் வேகமாக பரவி வருகிறது.