கல்லூரி மாணவர்களின் கலகலப்பை கமர்ஷியலாக சொல்லும் ‘சரமாரி’

News
0
(0)
 
நெல்லை ஜீவா தயாரிப்பில் கமல்.ஜி என்பவரது டைரக்சனில் உருவாகிவரும் படம் தான் ‘சரமாரி’. நெல்லையில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு ‘மாஸ்’ கலர்ந்த கமர்ஷியல் படமாக பரபரப்பாக உருவாகி வருகிறது இந்த ‘சரமாரி’.
 
அறிவழகன், ஜெயபிரகாஷ், ஆகாஷ், மனோஜ் என நான்கு பேர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகியாக ஹேமலதா நடிக்கிறார். இவர் பாயும்புலி, அறம்சினம், வேலைக்காரன் ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், பாம்பே செல்வம், சுஜாதா மற்றும் தயாரிப்பாளர் நெல்லை ஜீவாவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
இந்தப்படத்திற்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரஷாந்த் அர்வின் இசையமைக்கிறார். பாடல்களை சஞ்சய் செல்வம் எழுதியுள்ளார் ஒருங்கிணைப்பு பணிகளை பாம்பே செல்வம் கவனிக்கிறார்.
 
இந்தப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, பொள்ளாச்சி, திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படம் வெளியாக இருக்கிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.